இவ்வாண்டு இறுதி வரை வெளிநாட்டு தொழிலார்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க கூடாது..?

Sri M Saravanan

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் ஒரு சிறிய தொற்றாக உருவெடுத்த இந்த கொரோனா தற்போது உலகம் முழுக்க பல கோடி மக்கள் தாக்கியுள்ளது. பூமி பந்தில் உள்ள சுமார் 97 சதவிகித நாடுகளில் பல லட்சம் மக்களை கொன்றுகுவித்துள்ளது இந்த கொடிய கொரோனா நோய் தொற்று. 5 மாதங்களுக்கும் மேலாக உலகமே இந்த நோயின் காரணமாக ஸ்தம்பித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

மணி உயிர்களை அனுதினம் எடுக்கும் இந்த கொரோனா அது மட்டும் இல்லாமல் உலக பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது. பலர் இதனால் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோயினை சரியான முறையில் கையாண்டு வரும் மலேசியா சில புதிய விஷயங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து தவிக்கும் மலேசியர்களுக்கு உள்ளுர் நிறுவனங்கள் வேலை அளிப்பதை உறுதி செய்ய இந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு தொழிலார்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற புதிய முடிவினை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் முழு விபரம் குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.