இந்த 3 துறைகளில் மட்டுமே வெளிநாட்டவர் வேலை செய்ய அனுமதி..? – மனிதவள துணையமைச்சர்..!

Foreigners in Malaysia
Picture courtesy arabnews

மலேசியாவில் உள்ளது, உலகின் மிகப் பெரிய மருத்துவ கையுறைகளை தயாரிக்கும் “Top Glove Corporation Berhad”, என்ற நிறுவனம். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய தற்போது இந்த நிறுவனம் அண்மையில் முகமூடிகளை தயாரிக்கத் திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகின்றது. உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 5 கையுறைகளில் ஒன்று இந்த நிறுவனம் தயாரித்த ஒன்றாக தான் இருக்கும் என்பது ஒரு கூற்று.

அந்த அளவுக்கு உலக அளவில் அதிக கையுறைகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 110 மில்லியன் முகமூடிகளை தயாரிக்கும் திறன் கொண்டுள்ளதாக இருக்கிறது. ஆனால் அண்மையில் இவ்வாண்டு இறுதி வரை பிறநாட்டு தொழிலாளர்களை வேளையில் அமர்த்துவதற்கு தடை விதித்தது மலேசிய அரசு.

தற்போது கையுறைகள் தேவை அதிகரிப்பதாலும் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசியாவிற்குள் வருவதற்கான கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளதாலும் தற்போது உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாக டாப் Glove Corporation berhad தலைவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உள்நாட்டு தொழிலார்களை உடனடியாக வேளைக்கு அமர்த்துவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலேசியாவின் மனிதவள துணை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கட்டுமானம், தோட்டத்துறை மற்றும் விவசாயம் ஆகிய மூன்று தொழில்களில் மட்டுமே பிற நடவர் பயன்படுத்தப்படுவர் என்று தெரிவித்தார்.

இந்த கொரோனா காரணமாக பல மலேசியர்கள் வேலை இழந்துள்ளதே இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் சுமார் 4500 நிறுவங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms