“இதுவரை சுமார் 2,92,000 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது”

Vaccination Second Dose
Image Tweeted by BERNAMA

மலேசியாவில் இதுவரை 2,92,104 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். (First Dose Vaccine)

சிலாங்கூர் பகுதியில் தான் இதுவரை அதிக அளவில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (First Dose Vaccine)

“மாணவர்கள் பயமின்றி பள்ளிக்கு செல்லலாம்” – ஹபிபா அப்துல் ரஹீம்.!

இதுவரை சிலாங்கூர் பகுதியில் 35620 பேருக்கும், பேராக் பகுதியில் 31,675 பேருக்கும் மற்றும் சரவாக் பகுதியில் 30,634 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேற்குறிய இந்த தகவலை பிரபல ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் கோலாலம்பூர் பகுதியில் 28,244 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் 2,92,104 பேர் எந்த எந்த நகரத்தை சேர்ந்தவர்கள் என்ற முழு தகவலை ஆதம் பாபா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram