Face Mask : “1000 ரிங்கிட் அபராதம்” – இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் தற்போது கொண்டுவர இயலாது..!

Ismail Sabri
Image tweeted by Ismail Sabri

மலேசியா கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 125 உயிர்களை பறிகொடுத்துள்ளது. சரியாக 9249 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 8945 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் தொற்று மிக குறைவாக உள்ள இடங்களில் பொருளாதார துறைகள் துவங்க அரசு அனுமதி வழங்கியது.

மேலும் மலேசியாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் மலேசியாவில் மீட்சிக்கான கட்டுப்படும் அமலில் வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் முகக்கவசம் இன்றி பேரங்காடிகளுக்கு வரும் மக்களை சில அங்காடிகளில் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்றும், பேரங்காடிகள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க  : “நாடு திரும்பும் மலேசியர்கள் இனி NADMA-வில் பதிவு செய்ய வேண்டும்” – மூத்த அமைச்சர்..!

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் மீண்டும் தொற்றின் அளவு சற்று உயரவே ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் அவ்வாறு அணியாத மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த முகக்கவசம் அணிவது குறித்து மக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்த நிலையில் மூத்த அமைச்சர் இஸ்மாயில் புதிய விதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாமல் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்ட்டவர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்து அந்த தொகையினை குறைத்துக்கொள்ளலாம், ஆனால் முகக்கவசம் அணியாததற்கு 1000 ரிங்கிட் அபராதம் என்ற சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இயலாது என்று உறுதியா தெரிவித்துள்ளார் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms