கொரோனாவிற்கு எதிரான போராட்டம் – ‘மலேசியாவை பாராட்டும் சீன அதிகாரிகள்’

Noor hisham

கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் மலேசிய அதிகாரிகளுக்கு உதவ இங்கு வந்துள்ள சீன சுகாதார நிபுணர்கள், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மலேசியாவின் திறனைக் கண்டு பாராட்டுகின்றனர் என்று சுகாதார அமைக்க இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார். சீன மருத்துவர்களுடனான தனது தொலை தொடர்பு மாநாட்டில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதை தெரிவித்தார். மாநாட்டில் உடன் இருந்து சில சீனா விஞ்ஞானிகள் ஹூபே மாகாணத்தில் (கோவிட் -19 வெடிப்பின் மையப்பகுதி) பணியாற்றிய மருத்துவக் குழுவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 18 முதல் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை (MCO) அமல்படுத்துவதில் அதிகாரிகளின் விரைவான செயல்பாட்டை டாக்டர் நூர் ஹிஷாம் பாராட்டினார். “MCO கட்டம் 1, 2 மற்றும் 3யின் நேர்மறையான விளைவுகளை நாங்கள் கவனித்து வருகிறோம், என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகத்தின் குழு டாக்டர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும். மேலும் ஆய்வக சோதனை திறனைப் பொறுத்தவரை, சீனாவைச் சேர்ந்த மருத்துவக் குழு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளைப் பயன்படுத்தவும் விரைவான சோதனை கருவிகளை குறைவாக நம்பவும் அறிவுறுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.