“SOP-க்களை கடைபிடித்து கோவில் திருவிழாக்களை நடத்தலாம்” – இந்து சங்கத் தேசியத் தலைவர்

Batu caves Malaysia
Picture Courtesy lonelyplanet.com

மலேசியாவில் தற்போது மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இல்லது. கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கிய இந்த நடமாட்டக் கட்டுப்பாடு கடந்த மே மாதம் முதல் பொருளாதார மீட்சி குறித்து பொருளாதார துறைகள் திறக்க தளர்வு வழங்கப்பட்டது. இந்த மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அண்மையில் ஆலயங்கள் திறக்க மலேசியாவில் அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படியில் மலேசியாவின் பிரபலமான பத்து மலை முருகன் கோவில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஆடி மாதம் தற்போது தொடங்கியுள்ளன நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள SOPகளை முறையாக கடைபிடித்து ஆலய வளாகத்திற்குள் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக ‘தமிழ் மாலை’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் இந்து சங்கத் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் அடிப்படையில் SOPகளை பின்பற்றி ஆலயத்திற்குள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக்களை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms