சீனாவை மையமாக கொண்டு பரவி வரம் கொரோனா நோய் தொற்று காரணமாக, ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகர் வுஹான் நகரத்திலும் சுமார் 50 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி உள்ளனர். சீனாவில் பல இடங்களில் இந்த நிலையே தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க இந்த கொரோனவால் பல தொழில்களும் சரிவை கண்டுள்ளன.
மலேசிய, சீனாவிற்கு ‘டூரியன்’ பழங்களை பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகின்றது. ஆனால் தற்போது சீனாவில் நிலவிவரும் இந்த அசாதாரண சூழ்நிலையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விற்பனையும் சீனாவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி ஆகும் டூரியன் பழங்களின் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று மலேசிய டூரியன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். பரவி வரும் இந்த கொரோனா நோய் தொற்று மக்களையும் அவர்க்ளின் வாழ்வாதாரங்களையும் கடுமையாக பாதித்து வருகின்றது. கடந்த 2002 – 2003ம் ஆண்டு சீனாவின் ஹாங் காங் நகரை தாக்கி சுமார் 650 பேர் பலி வாங்கிய சார்ஸ் என்னும் நோயை மிஞ்சியுள்ளது இந்த கொரோனா. கொரோனா நோய் தொற்றால் இதுவரை சீனாவில் 700 பேர் இறந்துள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன.