“அவசரக்காலம் குறித்து பொய் செய்தி பரப்பினால் RM 1 லட்சம் அபராதம்.!”

Fake News Fine
Photo Courtesy Tamil Malar

மலேசியாவில் நடப்பில் உள்ள அவசரக்காலம் குறித்து பொய் செய்திகளை பரப்பினால் RM 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fake News Fine)

மேலும் 1 லட்சம் அபராதம் என்பதை தாண்டி 3 ஆண்டுகள் மிகாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Fake News Fine)

“இதுவரை சுமார் 2,92,000 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது”

இதுஒருபுரம் இருக்க இந்த பொய் செய்திகளுக்கு ஆதரவாகவும் அதே சமயம் அதற்கு தூண்டுதலாக செயல்படுவோருக்கும் RM 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல அவ்வாறு செயல்படுவோருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, மன்னர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் தெரிவித்தது.

மேலும் அவசரகால தொடர்பான விஷயங்களில் மன்னரின் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பிரகடனம் குறித்தோ, அல்லது அவசரநிலை சட்டங்கள் குறித்தோ யாரும் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடரமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் மலேசியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் தினமும் 3000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா அப்போது அறிவித்தார்.

மேலும் மேற்குறிப்பிட்ட அபாரதத்தால் இனி பொய் செய்திகளின் பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று பலரும் கருதுகின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram