Facemask : மலேசியாவில் கட்டாய முகக்கவசம் குறித்து பொதுமக்கள் எழுப்பும் எதிர் கேள்விகள்? அரசு தரப்பின் பதில் என்ன?

Facemask

மலேசியாவில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், பொதுவெளியில், முகக்கவசம் (Facemask) அணிவது கட்டாயமாக்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மதித்து  பெரும்பாலான மக்கள் விதிமுறையைப் பின்பற்றி வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மலேசியாவால் கொரோனா பாதிப்பு எப்படி பரவுகிறது என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குறிப்பாகக் பொதுமக்கள் அதிகம் கூடும் நெரிசல் மிக்க பகுதிகளான சந்தைகள், கடைவீதி மற்றும் பொது போக்குவரத்து முனையங்களில் அதிக பரவலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்துள்ளதால், பொது இடங்களில் அரசின் உத்தரவை மதித்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்ததது.

கட்டாய முகக்கவச விதியை மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதமோ அல்லது ஆறு மாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மக்கள் முகக்கவச விதிமுறைகளைப் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை  உறுதி செய்வதற்காக சாலை எங்கும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவலைக்கட்டுப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும், மக்கள் சில விதிமுறைகளில், குறிப்பிடத்தக்க அம்சங்களை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது தனியாக காரில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமா..? பூங்காக்களில் உடற்பயிற்சி செய்யும்போதும் முகக்கவசம் அணிய வேண்டுமா..? என்கிற மாதிரியான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

இதுவரையில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக 127 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’ – மீறிய 15-க்கும் மேற்பட்டோருக்கு 1000 ரிங்கிட் அபராதம்..!

 

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms