மலேசியா : ‘முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல..!!’ – அமைச்சர் இஸ்மாயில் சப்ரி

ismayil

மலேசியா கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 100-க்கும் அதிகமான உயிர்களை பறிகொடுத்துள்ளது. 6000-க்கும் அதிகமான மக்கள் இதுவரை இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. தற்போது சில தினங்களுக்கு முன்பு மலேசியாவில் தொற்று மிக குறைவாக உள்ள இடங்களில் பொருளாதார துறைகள் துவங்க அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் மலேசியாவில் முகக்கவசம் இன்றி பேரங்காடிகளுக்கு வரும் மக்களை சில அங்காடிகளில் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இது குறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்றும், பேரங்காடிகள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அங்காடிக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பேரங்காடிகள் எண்ணினால் அவர்களே அதை விற்கலாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.