‘முகக்கவசம் அணிவது கட்டாயம்’ – மீறிய 15-க்கும் மேற்பட்டோருக்கு 1000 ரிங்கிட் அபராதம்..!

Face Mask
Picture Courtesy malay mail

மலேசியா கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 125 உயிர்களை பறிகொடுத்துள்ளது. சரியாக 8985 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. கடந்த மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் தொற்று மிக குறைவாக உள்ள இடங்களில் பொருளாதார துறைகள் துவங்க அரசு அனுமதி வழங்கியது.

மேலும் மலேசியாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் மலேசியாவில் மீட்சிக்கான கட்டுப்படும் அமலில் வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் முகக்கவசம் இன்றி பேரங்காடிகளுக்கு வரும் மக்களை சில அங்காடிகளில் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்றும், பேரங்காடிகள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் அவ்வாறு அணியாத மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்தார். முன்பு கூறியதை போல தற்போது முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 15-க்கும் அதிகமானோர் முகக்கவசம் அணியாமல் வந்தபோது அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms