1000 ரிங்கிட் அல்ல 10,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும்.? – நூர் ஹிஷாம் அப்துல்லா..!

noor hisham abdulla
Image Tweeted by Noor Hisham Adbullah

மலேசியா கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 125 உயிர்களை பறிகொடுத்துள்ளது. சரியாக 9291 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. கடந்த மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் தொற்று மிக குறைவாக உள்ள இடங்களில் பொருளாதார துறைகள் துவங்க அரசு அனுமதி வழங்கியது. நேற்று மலேசியாவில் ஒரே ஒரே உள்ளூர் தொற்று ஏற்பட்டது, மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் யாருமே சிகிச்சை பெறவில்லை என்ற தகவலையும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதையும் படிங்க வந்தே பாரத் : தடுப்புக்காவலில் இருந்த 14 இந்தியர்கள் – சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தனர்..!

மேலும் மலேசியாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதால் மலேசியாவில் மீட்சிக்கான கட்டுப்படும் அமலில் வந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் முகக்கவசம் இன்றி பேரங்காடிகளுக்கு வரும் மக்களை சில அங்காடிகளில் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மலேசிய அமைச்சர் இஸ்மாயில் சப்ரி மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்றும், பேரங்காடிகள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முதல் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் அவ்வாறு அணியாத மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த முகக்கவசம் அணிவது குறித்து மக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 1988ம் வெளியிடப்பட்ட சட்டத்தின் கீழ், அரசு விதிமுறையை மீறினால் 1000 ரிங்கிட் அபராதம் என்பது அன்றைய காலகட்டத்திற்கு சரிவரும். ஆனால் தற்போது உள்ள சூழலுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்க வேண்டும். ஆகையால் அந்த சட்டத்தில் மற்றம் கொண்டுவர வேண்டும் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms