சட்டவிரோதமாக குடியிருந்த வெளிநாட்டினர் – 30,000 பேரை வெளியேற்றும் மலேசிய அரசு

Illegal-migrants

கடந்த சில ஆண்டுகளாகவே மலேசியாவில் சட்ட விரோதமாகக் குடியிருந்த வெளிநாட்டவர்களில், 1,95,471 பேர் சொந்த நாட்டுக்கு மன்னிப்பு அடிப்படையில் திரும்பிச்செல்ல பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் அதில் சுமார் 1,65,040 பேர் ஏற்கனவே தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளனர். மீதமுள்ள 30,000 பேரையும் அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக மலேசிய அரசு தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த நிகழ்வு தொடர்பாக மலேசியக் குடியேற்றத் துறை அதிகாரி ஜெனரல் கைரூல் தவுத் தகவல் அளித்தபோது,

மலேசியாவில் சட்ட விரோதமாகக் குடியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியா, மியான்மார் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். எஞ்சியுள்ளவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடு 2019 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், தற்போது இவர்களைத் திருப்பி அனுப்ப புதிய காலக்கெடுவை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றது என்றும் அறிவித்தார்.

மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்து அரசின் சலுகை அடிப்படையில் தாயகம் திரும்ப அபராதமாக 700 மலேசிய ரிங்கிட்டுக்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.