அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டாம் – மலேஷியா சுகாதார அமைச்சகத்தின் தலைமை செயலாளர்

noor hisham abdullah

தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை விதிக்கப்பட்டிருக்கும் இந்த நடைமட்டக் கட்டுப்பாடு தடை முழுமையான முறையில் பயனளிக்க பொதுமக்கள் சிறந்த முறையில் ஒத்துழைத்தாள் மட்டுமே முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க மலேசிய போலீசாரும் ராணுவமும் சிறந்த முறையில் போராடி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மக்கள் தேவை இன்றி வெளியில் வருவதை இன்றளவும் குறைத்துக்கொள்ளாதது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு அதற்கான அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேவையற்ற வதந்திகளை மக்கள் பரப்பவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே போல இந்த சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் தங்களது உரிமம் மற்றும் சாலை வரி போன்றவற்றை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் கூறியதாக மலேஷியா இன்று செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.