“மாணவர்கள் பயமின்றி பள்ளிக்கு செல்லலாம்” – ஹபிபா அப்துல் ரஹீம்.!

Education Ministry Malaysia
Twitter Image

தொற்றின் அளவு குறைந்து வருவதால் மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்கு செல்லலாம் என்று கல்வி அமைச்சக தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். (Education Ministry Malaysia)

SOP-க்கள் முறையாக மற்றும் கடுமையாக கடைபிடிக்கப்படுவதை பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (Education Ministry Malaysia)

திருச்சி – கோலாலம்பூர் : கூடுதலாக இயக்கப்படும் இரண்டு விமானங்கள்.!

சரவாக், குச்சிங் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் கடந்த மார்ச் 1 முதல் மீண்டும் பள்ளிகள் படிப்படியாக திறக்க தொடங்கின.

முதற்கட்டமாக, பாலர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இரண்டாம் படிவ மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இன்டெர்நேஷனல் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் அண்மையில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கிய காரணத்தால் பள்ளிகள் ஜனவரி மாதம் வரை புடுத்தலில் இருந்தது.

ஆனால் தற்போது தொற்றின் அளவு குறைந்திருப்பதால் மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்கு வருமாறு கல்லவி அமைச்சுகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, பள்ளி அறைகளில் போதிய இடைவெளி, கைகளை கழுவ போதிய வசதிகள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10ம் தேதி சுபாங் ஜெயா தேசிய பள்ளியில் சில மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இருப்பினும் அந்த பள்ளியின் சில அறைகள் மட்டுமே மூடப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram