மலேசியா – ‘படிப்பை தொடர விரும்பும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள்’ – அரசு வெளியிட்ட அறிக்கை..!

College Students

கொரோனாவில் இருந்து தற்போது மலேசிய மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பல பொருளாதார துறைகள் திறக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இந்த வருடம் அரசு தேர்வு எழுத்தவுள்ள படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் முஹமது ராட்ஸி ஜிடின் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலேசியாவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்டோபர் மாதம் முதல் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பொதுப் பல்கலைக்கழகத்தில் செயல்கல்வி பலியிலும் மாணவர்கள், தங்களுடைய வீடுகளில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தற்போது கல்லூரி வழக்கங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் மலேசியாவில் படிப்பை தொடர விரும்பும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் Education Malaysia Global Serviceல் பதிவு செய்வதன் மூலம் குடிநுழைவுமையத்தில் அனுமதி பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதே சமயம் அவ்வாறு வரும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.