கொரோனா தொற்றின் தாக்கம் உலகம் முழுக்க பரவத் தொடங்கி சுமார் 5 மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில் மலேசியா தனது நாட்டில் சிக்கியுள்ள பிற நாடுகளை சேர்ந்த மக்களை சொந்த நாடுகளுக்கு பாத்திரமாக அனுப்பிவைத்து வருகின்றது. அதே சமயம் அண்மைகாலமாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டை சேர்ந்த பிரஜைகளை கைது செய்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் இல்லாத இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் நேப்பாள் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த உரிய ஆவணங்கள் இல்லாத மக்களை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது மலேசியாவில் ஆவணமின்றி தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அவர்களுடைய தாயகத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக இஸ்மாயில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகள் அவர்களது குடிமக்களை திரும்ப அழைத்துக்கொள்ள விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் கம்போடிய தூதரகமும் தங்களுடைய நாட்டைச் சார்ந்த சுமார் 60-க்கும் அதிகமான நபர்களை திரும்ப அழைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார் என்று பிரபல தமிழ் முரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பு : மலேசியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் மீண்டும் அழைத்துக்கொள்ள மற்ற நாடுகளும் முன்வந்து ஒத்துழைப்பார்கள் என்று நம்புவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்