“வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை” – தலைமைச் செயலர்..!

Malaysia Tourism

கொரோனா காரணமாக பல நாடுகளில் பல தொழில்துறையில் முடங்கியுள்ளது பலரும் அறிந்த விஷயம். குறிப்பாக இயற்கை சூழலில் அமைந்துள்ள மலேசியாவில் சுற்றுலா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாக ஹோட்டல் தொழிலார்கள் சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழும் மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் RMCO எனப்படும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் மலேசியாவின் லங்காவியில் உள்ள ஹோட்டல்களில் சுமார் 800-க்கும் அதிகமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் புத்துயிர் பெரும் உள்நாட்டு சுற்றுலாவால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாவை நம்பி வாழும் மக்கள் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 10 லட்சம் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மலேசியாவில் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு. நூர் ஸாரி ஹமாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Face Mask : “1000 ரிங்கிட் அபராதம்” – இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் தற்போது கொண்டுவர இயலாது..!

இந்த விஷயத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதே முதுமையான விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து சிங்கப்பூர், புருணை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms