‘சிறந்த சூழலில் தனிமைப்படுத்துதல் மையம்’ – கட்டடக் கலைஞர்களுடன் ‘Webinar’ மூலம் ஆலோசனை..!!

Noor Hisham Abdullah
Image Tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக மலேசிவில் உள்ளூர் தொற்று ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் நேற்று ஆறு பேருக்கு தொற்று ஏற்பட்டபோதும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பதால் உள்ளுர் தொற்று நேற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள Pertubuhan Akitek Malaysia என்ற நிறுவன அதிகாரிகளுடன் இன்று காலை இணைய வழியில் ஒரு முக்கிய சந்திப்பினை நடத்தியுள்ளார் சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் அவர்கள்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “PAM என்று அழைக்கப்படும் Pertubuhan Akitek Malaysiaநடத்திய ஒரு வெபினாரில் கட்டடக் கலைஞர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. இந்த சந்திபோல் சிறந்த சூழலில் தனிமைப்படுத்துதல் மையத்திதை அமைப்பது குறித்து ஆலோசனை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.