டெல்லி – கோலாலம்பூர் : இருமுனை பயணமாக பறக்கும் 9 விமானங்கள்.!

Delhi KL Flights
Image Tweeted by Air India Express

இன்று ஜனவரி 6 2021 ஆண்டு டெல்லி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் டெல்லி மார்க்கமாக 9 விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கவுள்ளது. (Delhi KL Flights)

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. (Delhi KL Flights)

“புதுவருடத்தில் புறப்பட்ட முதல் விமானம்” – திருச்சி சென்ற 185 பயணிகள்.!

இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து இன்று தொடங்கி இம்மாத இறுதி வரை இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாகவும் மற்றும் அதிகாரபுரவ ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமும் பதியலாம்.

அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கோலாலம்பூர் முதல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

ஜனவரி 6, 12, 14, 16, 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்த விமானங்கள் இயங்கும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram