“போதைப்பொருள் கடத்தல்” : மலேசிய பெண்ணுக்கு வியட்நாம் அரசு விதித்த மரண தண்டனை..?

Kalaivaani
Picture Courtesy e.vnexpress.net

மலேசியாவை சேர்ந்த கலைவாணி முனியாண்டி என்ற பெண்ணுக்கு வியட்நாம் அரசு மரண தண்டனை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் ஹோ சி மின் நகரத்திற்கு வந்த கலைவாணியை சுமார் 3.3 கிலோ போதை பொருட்களுடன் டான் சோன் நாட் விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அந்த பெண்மணியின் சூட்கேஸை பரிசோதித்தபோது, ​​உணவு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.3 கிலோ கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க : “மலேசியாவில் பிறநாட்டு பணிப்பெண்களை அனுமதிக்க வேண்டும்” – பொது சுகாதார மருத்துவ குழு

இதுகுறித்து கலைவாணி அளித்த பதிலில் தான் “மலேசியாவில் உள்ள ஒரு விமான நிலையக் கிடங்கில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிந்தபோது, ​​தொழிலாளர் ஏற்றுமதி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் நிபுணத்துவம் பெற்ற பிரகாஷ் என்ற நபரின் தொலைபேசி எண்ணை இந்திய நபர் ஒருவர் கொடுத்தார் என்று கூறினார். அதன் பிறகு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு இருவரும் உயரையாடியுள்ளனர்.

மேலும் vnexpress என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் பிரகாஷ் என்ற அந்த நபர் கலைவாணியிடம் வெளிநாடுகளுக்கு தன்னுடைய பொருட்களை கொண்டு செல்ல உதவுமாறும் அதற்காக 6000 ரிங்கிட் (விமான டிக்கெட் மற்றும் தாங்கும் செலவுகள் இல்லாமல்) கலைவாணி பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு மரண தண்டை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms