டத்தோ அன்வர் இப்ராஹிம் தான் பிரதமர் வேட்பாளர்..? – பக்காத்தான் ஹராப்பான் அறிவிப்பு..!!

Dato Anwar Ibrahim
Photo Courtesy www.liewchintong.com

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய அரசியல் குழப்பத்தில் சிக்கித்தவித்து வருகின்றது மலேசியா. இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் இந்த அரசியல் இழுபறி நிலையில் தீடீர் தேர்தல் வரும்பட்சத்தில் அதனை முறையாக பாதுகாப்புடன் நடத்த முழு தயார் நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பதாகத் அண்மையில் தகவல் அளித்தார் தேர்தல் ஆணையர் அஸார் ஹருண். தேர்தல் ஆணையம் எப்போதும் விழிப்போடு இருப்பதாகவும் எல்லாவிதமான சூழலையும் எதிர்கொள் தயார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மிகமுக்கிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில் அன்வார் இப்ராஹிம் தான் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

தேர்தல் நடக்கும் பட்சத்தில் உரிய சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளித்தல், வாக்களிக்க வரும் மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதை. மேலும் அவளுக்கு அதிகமான உடல் வெப்பம் இருந்தால் அவர் வாக்களிக்க தனி அறை என்று பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.