COVID-19 : மலேசியா : பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா..? – ஏப்ரல் 10ம் தேதி அறிவிக்கப்படும்

noor hisham

உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர், 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் உலகம் முழுதும் கொரோனாவின் பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. மலேசியாவிலும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலில் இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு சில தினங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. காரணம் மக்கள் தேவை இன்றி வெளியில் வராமல் தகுந்த சமுதாய இடைவெளி மற்றும் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து சிறிது காலம் கடத்துவதே இந்த நோயில் இருந்து விடுபடவும் நோய் வராமல் தடுக்கவும் உள்ள ஒரே வழி.

மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்படும் அல்லது விளக்கிக்கொள்ளப்படுமா என்பது பற்றி வரும் ஏப்ரல் 10 அறிவிக்கவுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய அவர் மக்கள் சிறந்த முறையில் இந்த கட்டுப்பாட்டை கடைபிடித்தால் நிச்சயம் விரைவில் இந்த நோயினை நம்மால் வென்று வர முடியும் என்றும் கூறினார்.

ஏற்கனவே இந்த தடையை மீறுபவர்களுக்கு, 6 மாத சிறை தண்டனை அல்லது RM1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.