“அடுத்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பது சிரமம்.?” – தாரணி லோகநாதன்

Covid 19 Vaccine
Image Courtesy The Straight Times

2021ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து மலேசியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிப்பது என்பது சந்தேகத்திற்கு உரிய விஷயம் என்று ஒரு மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். (Covid 19 Vaccine)

வரவிருக்கும் 2021ம் ஆண்டு 60 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அண்மையில் மலேசிய பிரதமர் மக்களவையில் அறிவித்தார். (Covid 19 Vaccine)

“இம்மாத சேவை தொடங்கியது” – கோலாலம்பூரில் இருந்து தமிழகம் வந்த பயணிகள்.!

சீன அரசுடன் நடந்துள்ள ஒப்பந்தத்தில் அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்றும். இதற்கான சோதனை வரும் இந்த மாதத்தில் இருந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 24ம் தேதி சீன அரசுடன் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் மலேசியர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சுமார் 300 கோடி வெள்ளி இந்த இலவச தடுப்பூசி வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று மலேசிய செய்திநிறுவனமான தமிழ் மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி அளிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்று மருத்துவ நிபுணர் டாக்டர் தாரணி லோகநாதன் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்தினை முதலில் கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள், ஆபத்தை நிலையில் உள்ளோர், வயது மிகுந்தோர் ஆகியோருக்கு தான் முதலில் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை சமாளிக்க பல நாடுகளும் போராடி வருகின்றது. பல முன்னணி நாடுகள் மாற்றுமருந்தினை கண்டறிய கடுமையாக போராடி வருகின்றன.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram