“கொரோனா சிகிச்சை மையமாகும் மகப்பேறு வார்டு” – மலேசிய சுகாதார அமைச்சகம்.

Covid 19 Update
Image tweeted by Noor Hisham Abdullah

கொரோனா காரணமாக சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டலின் கீழ் MHKL மகப்பேறு வார்டு தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாறிவருகின்றது. (Covid 19 Update)

MHKL மகப்பேறு வார்டில் ஏற்கனவே 192 படுக்கைகள் இருந்தது. (Covid 19 Update)

தற்போது 343 படுக்கைகள் கொண்ட இடமாக மாற்றப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

“தீப ஒளித்திருநாள்” – வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்.

நேற்று மலேசியாவில் மீண்டும் 1300 என்ற அளவை கடந்துள்ளது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.

நேற்று ஒரே நாளில் உள்ளூரில் 1300 பேர் கொரோனா காரணமாக மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் சபாவில் 556 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

சபாவிற்கு அடுத்தபடியாக சிலாங்கூர் பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டுள்ளது. 361 பேர் சிலாங்கூர் பகுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மலேசியாவில் உள்ளூரில் தொற்றே இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியதும் தொடர்ந்து தொற்று கடந்த நான்கு நாட்களாக 1000ஐ கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேர் உள்பட 1304 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று 900 பேர் கொரோனாவில் இருந்து நேற்று விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32969 ஆக உள்ளது.

நேற்றும் ஒருவர் கொரோனாவிற்கு மலேசியாவில் பலியான நிலையில் இதுவறை 304 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொரோனாவில் இருந்த மீண்ட 726 பேரில் சபா பகுதியில் இருந்து 447 பேர் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram