“அதிகரிக்கும் குணமடைவோர் விகிதம்” – ஒரே நாளில் 1750 பேர் நலம் பெற்றனர்.!  

Covid 19 Third Wave
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 1012 பேருக்கு மலேசியாவில் தொற்று பரவியுள்ளது. (Covid 19 Third Wave)

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவாகி வருகின்றது.  குறிப்பாக சிலாங்கூர் மற்றும் சபா பகுதியில் தான் தொற்றின் அளவு அதிகம் உள்ளது. (Covid 19 Third Wave)

“கோலாலம்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடரும் கட்டுப்பாடு” – பாதுகாப்பு அமைச்சர்.!

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1005 பேரில் 277 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 203 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1005 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஏழு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 75306 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

நேற்று ஒரே நாளில் 1750 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 64056 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

சபா பகுதிக்கு அடுத்தபடியாக தலைநகர் கோலாலம்பூரில் 129 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 388 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram