“கோவிட் 19 பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்”

Malaysia Corona
Image tweeted by Noor Hisham Abdullah

தற்போது மலேசியாவில் கோவிட் 19 (Covid 19 Test) பரிசோதனைக்கு சுமார் 150 வெள்ளி பெறப்படுகிறது. அதனை குறைத்து 50 வெள்ளியாக பெறவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கிள்ளான் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இதனை நேற்று தெரிவித்துள்ளார். (Covid 19 Test)

இதையும் படிங்க : “200-ஐ தாண்டிய பலி எண்னிக்கை” – மலேசியா திரும்பிய 4 இந்தியர்களுக்கு கொரோனா.!

மலேசியாவில் கிள்ளான், சபா மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் தொற்றின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவிட் 19 பரிசோதனை கட்டணத்தை 50 வெள்ளியாக குறைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிள்ளான் பகுதியில் பல இடங்கள் சிவப்பு மண்டலமாக மாறிவருகின்றது. இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கிள்ளான் பகுதியில் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அரசு நிறுவனங்களில் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா சோதனைக்கு 150 வெள்ளி பெறப்படுகிறது.

இந்த அளவை 50 வெளியாக குறைக்க அரசு ஆவனம்செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மலேசியாவில் தொற்றின் அளவு என்பது தொடர்ந்து உச்சத்தில் குறிப்பிடத்தக்கது. நேற்று 700-க்கும் அதிகமானோர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram