“பிற நாட்டு தொழிலாளர்கள் மீது பெரிய அளவில் பரிசோதனையைத் தொடங்குவோம்” – மலேசிய சுகாதார அமைச்சகம்

noor hisham abdullah

மலேசியாவில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்தாலும் தொடர்ச்சியாக மலேஷியா இந்த கொரோனாவிற்கு எதிராக போராடும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். இந்நிலையில் மலேசிய சுகாதார அமைச்சகம் நாட்டிலுள்ள வெளிநாட்டு சமூகத்தின் மீது பெரிய அளவிலான கொரோனா சோதனையை மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட அறிக்கையில் “நாங்கள் சிங்கப்பூரிடமிருந்து இதை கற்றுக்கொள்கிறோம். நம் நாட்டில் வேலைபார்க்கும் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் மீது பெரிய அளவிலான பரிசோதனையைத் தொடங்குவோம்” என்று அவர் கூறினார்.

தற்போது மலேசியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி நேற்றைய நிலரவப்படி, சிங்கப்பூர் சுமார் 900-க்கும் அதிகமான புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. ஆனால் நேற்று பதிவான 900க்கும் அதிகமான வழக்குகளில் வெறும் 14 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள். மற்ற அனைவரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் எத்தனை மலேசியர்கள் உள்ளனர் என்பது இதுவரை தெரியவரவில்லை. சிங்கப்பூரில் தற்போது பிறநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களை அதிக அளவில் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.