“200-ஐ தாண்டிய பலி எண்னிக்கை” – மலேசியா திரும்பிய 4 இந்தியர்களுக்கு கொரோனா.!

Malaysia Corona
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியா தற்போது (Covid 19) கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ளதாக அரசு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த நோய் தொற்று இப்போது பெருமளவில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் புதிதாக 842 பேருக்கு தொற்று பரவி உள்ளது (Covid 19).

தற்போது சில விசாக்களுக்கு மலேசிய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நேற்று மலேசியா திரும்பிய 4 இந்தியர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “வாழ்நாள் முழுவதும் அப்படி வாழ முடியாது” – ஏர் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி..!

10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தொற்று பாதிப்பில் சபா பகுதில் முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 578 பேர் நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுஒருபுரம் இருக்க மலேசியாவில் கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்னிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை 204 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர்.

இந்த நோயை முற்றிலும் ஒழிக்க மலேசிய அரசு அனுதினமும் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மக்களும் அரசுக்கு உதவ வேண்டும் என்பதே பல தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், இதுவரை 15417 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram