கொரோனா : மீண்டு வரும் மலேசியா : 700-க்கும் அதிகமானோர் பூரண குணம்

malaysia recovering

கொரோனா பரவளின் காரணமாக இதுவரை உலக அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பதித்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் தோன்றிய இந்த நோய் தற்போது உலகம் முழுக்க கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தற்போது நிலவும் நிலை ஒட்டுமொத்த உலகை உலுக்கி உள்ளது. கியூபா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் நேசக்கரத்தை நீட்டி வருகின்றன. மனிதனின் இந்த உதவும் குணம் கொரோனா போன்ற நோயினை வெல்லும் வலிமை உடையது என்றும். நிச்சயம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் நாடுகள் மீண்டு வரும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் மலேசியாவும் தன்னால் இயன்ற போராட்டத்தை நடத்தி வருகின்றது. இந்த நோயிற்கு தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ மருந்தும் இல்லை என்பதால் மக்கள் தகுந்த சுகாதாரத்தோடு தேவை இன்றி வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டில் இருப்பதே சிறந்த மருந்து என்று பல நாடுகளும் தெரிவித்து வருகின்றன. அதனால் மலேஷியா மக்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் உள்ள இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டை கடைபிடிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மலேசியாவில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து வரும் நபர்களின் எண்னிக்கை அதிகரித்து உள்ளது. இது குறித்து மலேசியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த மார்ச் 27ம் தேதி அன்று 44 பேர், மார்ச் 28ம் தேதி அன்று 61 பேர், மார்ச் 29ம் தேதி அன்று 68 பேர் மற்றும் 30 தேதி 91 குணமடைந்துள்ளனர். மேலும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166 என்று குறிப்பிட்டுள்ளது.