மலேசியாவில் தொடரும் நடமாட்டக் கட்டுப்பாடு – ‘பரிதவிக்கும் பழங்குடி மக்கள்’

malaysia people

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு தொற்றில் ஆரமித்த இந்த நோய் தற்போது உலக அளவில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் பரவியுள்ளது. சீனாவில் வெகுவாக குறைந்துள்ள கொரோனா, கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் தனது வெறியாட்டத்தை ஆடி வந்தது. ஆனால் ஐரோப்பாவிலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

மலேசியாவிலும் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நேற்று சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதுவரை மலேசியாவில் 82 பேரை பலிவாங்கியுள்ள இந்த கொரோனா நோயில் இருந்து 2000-க்கும் அதிகமான மக்கள் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசியாவில் நிலவும் பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் தினக்கூலி தொழிலார்கள் பாதித்து வரும் நிலையில், தற்போது மலேசியாவின் தொலைதூர பகுதிகளில் வசிக்கு பழங்குடி மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ‘அல்ஜஷீரா’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மலேசியாவில் பல பழங்குடி மக்கள் அத்யாவசிய பொருட்கள் இன்றி வாடி வருவதாக கூறப்படுகிறது.