COVID – 19 : மலேசியாவில் ஏப்ரல் 14 வரை நீடிக்கப்பட்ட பொது நடமாட்டத் தடை

stay increase

உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோய் தற்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி சுமார் ஆறு ஆயிரம் பேருக்கு மேல் கொன்றுகுவித்துள்ளது. தற்போது மலேசியாவில் அதிக அளவில் பரவி வரும் இந்த நோயை தடுக்க பெரிய அளவில் போராடி வருகின்றது மலேசியா அரசு.

இந்நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மலேசியாவின் புதிய பிரதமர் மொஹிதீன் யாசின் மலேசிய நாட்டில் பொது நடமாட்ட தடையை விதித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த தடையை சில லட்சம் மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை என்று மலேசிய ஆயுதப்படை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பாதிப்பால் புதிதாக யாரும் பாதிக்கப்படாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியாவில் தற்போது நிலவி வரும் பொது நடமாட்டக் கட்டுப்பாடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நிகழ்வே தவிர மக்கள் இதனால் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவை இன்றி மக்கள் மளிகை பொருட்களை வாங்கி அடுக்க வேண்டாம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஏற்கனவே தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.