COVID – 19 : மலேசியா தேசிய மிருகக்காட்சிசாலை – ‘பசியில் வாடும் மிருகங்கள்’

zoo negara malaysia

மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில் 1963ம் ஆண்டு சுமார் 110 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டது தான் தேசிய மிருகக்காட்சிசாலை. ஏறத்தாழ சுமார் 50 ஆண்டுகளும் மேலாக இயங்கி வரும் இந்த மிருகக்காட்சி சாலை தற்போது வரலாறு காணாத அளவில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மலேசிய முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே இந்த கொரோனாவால் முடங்கிப்போய் உள்ள நிலையில் மலேசியாவில் உள்ள இந்த மிருகக்காட்சி சாலையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மலேசியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதுவரை அங்கு வந்து செல்லும் மக்கள் பெரும் டிக்கெட் மற்றும் அந்த இடத்தில் இருந்து வரும் வாடகையை கொண்டு அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியமும், அங்கு வசிக்கும் மிருகங்களுக்கு உணவும் வழங்கி வந்தது அந்த நிறுவனம். ஆனால் தற்போது நிலவும் நடமாட்டக் கட்டுப்பட்டால் மிகவும் இக்கட்டான சூழலை சந்தித்து வருகின்றது, மிருங்கங்களுக்கு சரிவர உணவளிக்க முடியவில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் பொது மக்கள் வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பூங்காவின் விலங்கியல் அதிகாரி திரு. வான் நூர் ஹயாதி வான் ஆப் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாவர உண்ணிகளுக்கு காய்கறி மற்றும் பழ வகைகளும், மாமிச பட்சிணிகளுக்கு இறைச்சியும் வழங்க வேண்டிய நிலை உள்ளதால் மக்கள் veterinar@zoonegaramalaysia.my என்ற இணையதள முகவரி மூலம் தங்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.