அட இப்படி ஒரு திருமணமா? வியக்க வைத்த வித்தியாச திருமணம்!!

Marriage

பொதுமுடக்கத்திலும் மலேசியாவில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட திருமணம் நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் மலேசியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, அதன்படி, பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தசூழலில் தலைநகர் கோலாலம்பூரில் ஒரு புதுமணத் தம்பதி, 10,000 பேர் வரை பங்கேற்ற திருமண விழாவை கோலாகலமாக நடத்தியுள்ளனர்.

Couple Hosts 10,000 Guests At Drive-Through Wedding Amid Pandemic

இத்தனை பேர் கலந்துகொண்டாலும் அந்த விழாவில் கொரோனா விதிமுறைகளை மீறவில்லை என்பது தான் ஆச்சர்யம். எப்படி சாத்தியம் என பலருக்கு வியப்பாக இருக்கலாம். திருமணத்துக்குச் சென்ற விருந்தினர்கள் அனைவரும், Drive-thru என அழைக்கப்படும் வாகன அணிவகுப்பு முறையில் பங்கேற்றனர். விருந்தினர்கள், காரை மெதுவாக ஓட்டிச் சென்று மணமக்களுக்குக் கையசைத்து வாழ்த்துக் கூறினர். யாருமே மணமக்களுக்கு அருகில் வந்து கைக்குலுக்கு வாழ்த்து சொல்லவில்லை. மாறாக காரிலிருந்த படியே வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர். அணிவகுப்பில் 10,000 கார்கள் பங்கேற்றன. நெருங்கிய உறவினர் மட்டுமே மணமக்கள் மேடையில் இருந்தனர். அவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

விருந்தினர் அனைவரும் இருந்த காரின் ஜன்னல்கள் மூடியிருந்ததால், பாதுகாப்புக் குறித்து அச்சப்பட தேவையில்லை.

மணமகனின் தந்தை அட்னான் முன்னாள் அமைச்சராவார். கொரோனா தொற்று மத்தியிலும் இத்தனை பேர் தனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி என அட்னான் தெரிவித்துள்ளார். விதிகளைப் பின்பற்றி, காரைவிட்டு வெளியேறாத விருந்தாளிகளுக்கு அட்னான் பேஸ்புக்கில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவில் இதுவரை 93 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram