கொரோனா வைரஸ் நெருக்கடி : ‘மலேசியாவில் கடுமையாக பாதித்துள்ள சுற்றுலாத்துறை’

Tourism

உலகின் பல நாடுகளைப்போல மலேசியாவும் சுற்றுலா மூலம் பெருமளவு பொருளாதாரத்தை ஈடும் ஒரு நாடக திகழ்கின்றது. ஆனால் இந்த ஆண்டு அந்த சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பியுள்ள சுமார் 3.5 மில்லியன் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். “Visit Malaysia 2020”, வழக்கத்தை விட இந்த ஆண்டு மலேசியாவில் இந்த நிகழ்விற்காக சுமார் 30 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவை சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று கணிக்கப்பட்டது.

இந்நிலையில் உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா இந்த சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சுமார் 3.5 மில்லியன் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த சுற்றுலா முடக்கம் காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது ஹோட்டல் மற்றும் விடுதி சார்ந்த தொழிலாளர்களே. மலேசிய ஹோட்டல் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யாப் லிப் செங் கூறுகையில் இந்த 2020ம் ஆண்டின் இறுதியில் சுமார் 60 சதவிகித சுற்றுலா துறை முற்றிலும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். “சுத்தமான மற்றும் பாதுகாப்பான மலேசியா” பிரச்சாரம் இது அடையப்பட வேண்டிய வழிகளில் ஒன்றாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஹோட்டல்களுக்கு சான்றிதழ் வழங்குவதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.