“புதிதாக உருமாறிய கொரோனா” – மலேசியாவில் இருவர் பாதிப்பு.?

Corona Virus Mutation
Twitter Image

B1525 என்று அழைக்கப்படும் புதிதாக உருமாறியுள்ள கொரோனாவால் மலேசியாவில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Corona Virus Mutation)

இந்த வகை கொரோனா கிருமி தொற்று இயல்பை விட இன்னும் வேகமாக பரவக்கூடிய திறனுடையது என்று கூறப்படுகிறது. (Corona Virus Mutation)

சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி : “குத்தகைக்கு விட இது டூரியன் தோட்டமல்ல” – கருப்பையா.!

துபாய்க்கு பயணம் மேற்கொண்டு இருவர் தற்போது இந்த வகை கொரோனா கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசியாவில் கடந்த 9 நாட்களாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட சில இடங்களில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை சுமார் 32 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக மலேசியாவில் 2154 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 3275 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர். இதுவரை 2,86,904 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக உருமாறியுள்ள கொரோனாவால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளது சிறு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதால் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram