“மலேசியாவில் வேகமெடுக்கும் கொரோனா” – ஒரே நாளில் 1228 பேர் பாதிப்பு..!

Malaysia Election
Image tweeted by noor hisham abdulla

மலேசியாவில் இதுவரை இல்லாத (Corona Malaysia) அளவில் நேற்று ஒரே நாளில் 1228 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் இதுவரை இல்லாத அளவில் (Corona Malaysia) சபா பகுதியில் 889 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “10 சதவிகித வெளிநாட்டு ஊழியர்களை குறைக்க திட்டம்” – FGV நிறுவனம்.!

இதுவரை மலேசியாவில் 221 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 7 பேர் மரணித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வெளியாகும் செய்திகள் பல மாத கடின உழைப்பை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது என்பது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று பலர் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து இந்த மருந்து கண்டறியப்படாத நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

Sabah பகுதியில் மீண்டும் தற்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாடு முழுவது மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தால் அது மலேசிய பொருளாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இக்கட்டான சூழலில் ஆறுதல் செய்தியாக நேற்று ஒரே நாளில் 671 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram