“வரிசையை முந்திச்செல்வோர்க்கு RM 50,000 அபராதம்” – அமைச்சர் ஆதாம் பாபா.!

Vaccination Second Dose
Image Tweeted by BERNAMA

கொரோனா தடுப்பூசி பெற பிறப்பிக்கப்பட்டுள்ள வரிசையை முந்திச்சென்று தடுப்பூசி பெற நினைப்போருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும். (Corona Vaccine List)

இந்த அறிவிப்பினை அமைச்சர் ஆதாம் பாபா தற்போது தெரிவித்துள்ளார். (Corona Vaccine List)

“கே.எல் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்” – மலேசிய அரசு.!

கொரோனா தடுப்பூசி அரசு குறிப்பிட்டுள்ள வரிசையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அந்த வரிசையை மீறி அதிகாரத்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி பெற முயன்றால் அவர்கள் தண்டனைக்கு உள்ளவர்கள் என்று தெரிவித்தார்.

மலேசியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியானது கடந்த பிப்ரவரி 26ம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 32 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

முன்களப்பணியாளர்கள் பலர் தொடர்ச்சியாக தடுப்பூசி பெற்ற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் போன்ற பலர் தடுப்பூசியை பெற்று வருகின்றனர்.

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. ஜெர்மன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு வருகின்றது.

மேலும் தடுப்பூசி பெரும் மில்லினில் ஒருவருக்கு மட்டுமே அதற்கான பக்கவிளைவுகள் இருக்கும் என்று சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார்.

இந்தநிலையில் படிப்படியாக வழங்கப்படும் தடுப்பூசிகளை முந்திச்சென்று பெற நினைப்போருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram