“கொரோனா தடுப்பூசி” – மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.!

Corona Vaccine Awareness
Twitter Image

உலக அளவில் பல ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக டாக்டர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். (Corona Vaccine Awareness)

ஆதலால் மக்கள் பயமின்றி கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். (Corona Vaccine Awareness)

“அவசரக்காலம் குறித்து பொய் செய்தி பரப்பினால் RM 1 லட்சம் அபராதம்.!”

தேசிய மருந்தியல் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதாக அவர் கூறினார்.

இம்மருந்து மக்களுக்கு பாதிப்பு அளிக்காது என்றும், மிக மிகக்குறைவான அளவிலேயே பக்கவிளைவுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 2,92,000-க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை சுகாதார அமைச்சர் ஆதம் பாபா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 80 சதவிகித மக்களுக்கு மலேசிய அரசு தடுப்பூசிகள் அளிக்க முடிவு செய்துள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த பணியினை செய்து வருகின்றது மலேசிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram