“தொடர்ந்து முன்னிலையில் Sabah” – 40 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை.

Corona Deaths Malaysia
Image tweeted by KKMalaysia

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் (Corona Update Malaysia) பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது 1000ஐ கடந்து வருகின்றது.

மேலும் உள்ளுரில் 913 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பல நாட்களாக சபா பகுதியில் தான் அதிக அளவில் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (Corona Update Malaysia)

“தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்”

அதே சமயம் இன்று மலேசியாவில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா காரணமாக மலேசியாவில் 303 பேர் மரணித்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்து வந்தது. ஆனால் தற்போது 900கும் குறைவான அளவில் தொற்று பதிவாகி வருகின்றது.

மேலும் ஆறுதல் தரும் செய்தியாக தினமும் 800-க்கும் அதிகமான மக்கள் தொற்றில் இருந்து மீண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் 996 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மலேசியாவில் 32069 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை மலேசியாவில் கொரோனா பாதித்த மக்களின் எண்ணிக்கை 43791 ஆகும். மக்கள் ஒத்துழைத்தாள் நிச்சயம் கொரோனாவில் இருந்து மலேசியா விரைவில் மீண்டு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் கவனத்துடன் செயல்பாடு பலர் அரசு நிறுவனங்களும் அறிவுறுத்தி வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram