“வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கோவிட் 19 சோதனை” – மறுக்கும் முதலாளிகளுக்கு தண்டனை.?

Corona Test
Image Tweeted by Ismail Sabri Yakob

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யவேண்டும் என்ற விதிக்கு கீழ்ப்படியாத முதலாளிகளுக்கு சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Corona Test)

கிள்ளான் பகுதியில் செயல்படும் ஒரு கையுறை நிறுவனம் SOP-க்களை மீறியபோது அந்நிறுவனத்திற்கு RM1000 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. (Corona Test)

“மலேசியாவில் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறும் மூன்று முக்கிய இடங்கள்”

அந்த நிகழ்வுக்கு அரசுக்கு எதிராக எழுந்த சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இந்த அறிவிப்பை மூத்த அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

SOP-க்களை ஏற்க மறுத்து வெளிநாட்டு தொழிலார்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யாத முதலாளிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 மதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

மேலும் தொற்று நோய் தடுப்பு விதி 1988ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் கூறினார்.

SOPகள் கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசியாவை இந்த பேராபத்தில் இருந்து காக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை பொறுத்தவரை சுமார் 1.7 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு உள்ளார்.

அவர்களில் இதுவரை 34,903 முதலாளிகள் அவர்களது 8,21,271 தொழிலார்களுக்கான தரவுகளை அரசுடன் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரனும் அரசு விதித்திருக்கும் சட்டதிட்டங்களை முறையாக கடைபிடித்தால் கொரோனவை நிச்சயம் வென்று விடலாம்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram

Twitter

* Instagram