“மலேசியா – அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கட்டாய கோவிட் 19 சோதனை.?”

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

மலேசியாவின் சபா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பினாங்கு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், அனைத்து துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாய கோவிட் 19 சோதனை செய்யப்படும். (Corona Test)

இந்த தகவலை மலேசிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இந்த சோதனைக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Corona Test)

மலேசியாவில் அவதிப்படும் வேன் ஓட்டுநர்கள்.!

ஜொகூர், திரெங்காணு மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் தொற்றின் அளவு குறைந்தால் அந்த மூன்று பகுதிகளில் தடையை நீக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.

மலேசியாவில் வெகு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையில் சபா முதலிடம் வகித்தது குறிப்பிடத்தக்கது. தலைநகரில் தொற்று அதிகரித்தது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 52638 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 956 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 39088 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோலாலம்பூர், சபா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பணிபுரியும் அனைத்து துறை வெளிநாட்டு தொழிலார்களுக்கும் கொரோனா சோதனை செய்யவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. (Corona Test)

சமூகப்பாதுகாப்பு கழகத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு இந்த ஆர்.டி.கே சோதனை செய்ய மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மீதமுள்ள தொகையை அந்த அந்த நிறுவனத்தின் முதலாளிகளே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram