“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை” – 186 தனியார் மருத்துவர்களுக்கு அனுமதி.!

Vaccine Second Dose
Image Courtesy BERNAMA

மலேசியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க நாடுமுழுவதும் 186 தனியார் மருத்துவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. (Corona Private Doctors)

மேலும் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா அவர்கள். (Corona Private Doctors)

“குறையும் தொற்று” : பச்சை மண்டலங்களாக மாறிய 11 மாவட்டங்கள்.!

அதேபோல தேவைப்படுவோரை Wrist Band எனப்படும் மணிகட்டைபட்டை அணிய இந்த மருத்துவர்களால் கட்டளையிட முடியும்.

இந்த 186 பேரில் 66 பேர் சிலாங்கூர் பகுதியில் இருந்தும், 43 பேர் கோலாலம்பூரில் இருந்தும், 26 பேர் ஜொகூரில் இருந்தும் 16 பேர் பினாங்கு மற்றும் 13 பேர் நெகிரி செம்பிலானில் இருந்து வந்துள்ளனர்.

அண்மையில் தலைநகர் கோலாலம்பூரை தொடர்ந்து, சிலாங்கூர் பகுதியில் மேலும் மூன்று தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாறியது.

தனியார் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் திரு. குல்ஜித் சிங் இந்த அறிவிப்பினை அப்போது வெளியிட்டார்.

ஏற்கனவே கோலாலம்பூரில் இரண்டு தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுமார் 800 சுகாதார பணியாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் கொரோனா தடுப்பூசி வழங்குதலில் அடுத்தகட்டமாக தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பினை அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram