கொரோனா : மலேசியாவில் பொது போக்குவரத்தில் மாற்றம் – பாதுகாப்புத் துறை அமைச்சர்

isamail sabri

மலேசியாவில் கொரோனா காரணமாக தற்போது நடமாட்ட தடை அமலில் உள்ளது, கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்கனவே மார்ச் மாதம் 31ம் தேதி வரை நிலவிய இந்த தடை தற்போது ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நேற்று அறிவித்தார். மேலும் மக்கள் இந்த தடையை முறையாக கடைபிடித்து இந்த நோயின் பரவலை தடுக்க உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மலேசியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த பாதிப்பை தடுக்க அடுத்த நடவடிக்கையாக பொது போக்குவரத்தில் புதிய மற்றம் ஒன்றை அறிவித்துள்ளார் மலேஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பொது போக்குவரத்து இனி காலை 6 மணி முதல் 10 மணி வரையும், அதே போல மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

ஆனால் தற்போது இயங்கி வரும் வாடகை டாக்ஸி சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.