மலேசியாவில் தொடர்ந்து பரவும் கொரோனா – 70-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

malaysians with corona

உலகம் முழுவதும் கொரோனா நோய் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தற்போது இந்த நோய் தொற்று பரவியுள்ளது. மலேசியாவில் கடந்த சில நாட்களுக்கு மும்பு மலேசிய கொரோனாவை எதிர்த்து நல்ல நிலையில் போராடி வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் இந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மலேசியாவில் சுமார் ஏழு பேருக்கும், அதே வாரம் புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சகம் தற்போது உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 28 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு சேர்த்து இதுவரை மலேசியாவில் சுமார் 83 பேர் தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த 83 பேரில் 65 பேர் மலேசியர்கள் என்றும் மற்றவர்கள் சீனர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு கட்டுப்பாட்டில் இருந்த இந்த கொரோனா நோய் தொற்று தற்போது மீண்டும் பரவ தொடங்கி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையாக பரவி வரும் இந்த நோயை விரைந்து அழிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கின்றன.