COVID : மலேசியாவில் கொரோனா – இதுவரை 39 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தகவல்

corona

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவை இந்திய உள்ளிட்ட பல நாடுகள் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று உலகை அச்சுறுத்தி வருகின்றது. பிறந்த இந்த ஆண்டு பலருக்கும் பல இன்னல்களை தந்து வருவது பலரையும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. நேற்று நண்பகல் நிலையின்படி மலேசியாவில் மேலும் 41 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது சுமார் 203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், மேலும் இதில் ஐந்து நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா. இந்த அறிக்கையில் சுமார் 19 பேர் இந்த கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை இந்த ஆண்டு மலேசியாவில் இந்த நோய் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து, சுமார் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 39 பேர் இந்த நோயில் இருந்து முழுமையாக விடுபட்டு
வீடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் அனைவரும் தேவையற்ற பயத்தை குறைத்து நல்ல சுகாதாரத்தை கடைபிடித்தாலே இந்த நோய் வரலாம் தடுக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.