மலேசியாவில் தொடர்ந்து பரவும் கொரோனா – அதிகரிக்கும் பாதிப்பு  

corona

கடந்த ஆண்டின் இறுதியல் இருந்து உலகை மிகவும் அச்சுறுத்தி வருகின்றது நோவேல் கொரோனா நோய் தொற்று. COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நோய் உலகம் முழுவதும் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தற்போது இந்த நோய் தொற்று பரவியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு மும்புவரை மலேசியா இந்த கொரோனாவை எதிர்த்து நல்ல நிலையில் போராடி வந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக இந்த நோய் தொற்று மலேசியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் வெறும் 22 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுமார் 80க்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து மலேசிய திரும்பிய ஒருவருக்கு இந்த நோய் தொற்று இருப்தாக தற்போது மலேசியா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 18 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு சேர்த்து இதுவரை மலேசியாவில் சுமார் 85க்கும்  அதிமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் இந்த நோயின் காரணமாக மலேசியா முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. பாதிக்கப்பட அனைவருக்கும் முழு வீச்சில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.