மலேசியாவில் கொரோனா – 25 பேர் நலம் பெற்றுள்ளதாக தகவல்

malaysia corona

மலேசியாவை பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக மிகவும் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா நோய் தொற்று தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே 80-க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் 12 பேர் இந்த நோயின் காரணமாபா புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட 33வது நோயாளியிடம் இருந்துதான் இந்த நோய் தற்போது பரவி உள்ளது என்று தற்போது புதிதாகத் பொறுப்பேற்றுள்ள சுகாதார அமைச்சர் டத்துக் செரி டாக்டர் ஆதாம் பாபா கூறினார். இதுகுறித்து கடந்த செவ்வாய் கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது மலேசியாவில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் சுமார் 25 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல கோலாலம்பூர் விமான நிலையத்தில் தற்போது பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகள் இன்னும் அதிகரித்திருப்பதாகவும். ஸ்கிரீனிங் செயல்முறையை நடத்துவதற்காக முனையத்தில் மொத்தம் 150 அமைச்சக அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.