ஒரே நாளில் 16 பேர் மரணம் – கூடுதல் கட்டுப்பாட்டிற்கு வாய்ப்பு.!

Corona Death Rate
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா காரணமாக 16 பேர் மரணித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவில் இது மிகப்பெரிய விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. (Corona Death Rate)

மேலும் நேற்று கொரோனா காரணமாக மரணித்த 16 பேரில் 9 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (Corona Death Rate)

கோலாலம்பூர் – சென்னை : தாயகம் புறப்பட்ட 370 இந்தியர்கள்.!

மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் இந்த மூன்றாம் அலையில் வெகு கடுமையாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

தினமும் 2000 என்ற அளவை தாண்டி பலர் மலேசியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருவது பெரும் பீதியை அளித்துள்ளது.

இதுவரை மலேசியாவில் 537 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளனர். அதே சமயம் 1,31,108 பேர் இதுவறை மலேசியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 1,05,431 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 2708 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகரித்து வரும் தொற்றால் மேலும் தடை மற்றும் நடமாட்டக்கட்டுப்பாடு சில பகுதிகளில் விதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை வரும் திங்கள் அன்று பிரதமர் வெளியிட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

கடுமையான SOP-க்களால் மட்டுமே கட்டாயம் இந்த கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram