“இனி வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது” – மலேசியா திரும்புவோருக்கு புதிய விதிகள்..!!

Ismayil sabari
Image tweeted by Ismail Sabri

இந்த இக்கட்டான சூழல் தொடங்கியதில் இருந்து அனுதினம் மலேசியாவில் பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மலேசியாவிற்குள் நுழையும் அனைவருமே கட்டாய தனிமைப்படுத்துதலுக்கான செலவைச் ஏற்க வேண்டியிருக்கும் என்றும், மேலும் அவர்கள் ஒப்புதல் கடிதம் ஒன்றிலும் கையெழுத்திட வேண்டும் என்றும் பாதுக்காப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜூலை 21ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார். இதுவரை பிறநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அணுமதிக்கப்பட்ட நிலையில் பலர் அதை மீறுவதாகவும் ஆகையால் இனி நாடு திரும்புவோர்கள் அரசு அனுமதிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான கட்டணத்தினையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை வரும் ஜூலை 24 2020 முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms